Skip to main content

Posts

Scientific Research Papers-42

 Scientific Research Papers-42 ( இன்று நாம் புதிதாக ஒரு ஆராய்ச்சியை மேற்கொள்ளலாமா ? அது பாவம் மற்றும் புண்ணியம் பற்றியது.) வேதம் ஓதுவதால் பிராமணர்கள் தூய்மையடைகிறார்கள் என்று மனுஸ்மிருதி கூறுகிறது.வேதமந்திரத்தை உச்சரித்து பிராமணர்கள் எவ்வாறு தங்களை தூய்மைப்படுத்திக்கொள்கிறார்கள் ? பிராமணர்கள் அரசர்களிடமிருந்தும் , வைசியர்களிடமிருந்தும் தானம் பெறுகிறார்கள் இதனால் அவர்களது பாவம் பிராமணர்களை வந்து சேர்கிறது. பாவத்தின் பலன் தீமை , துன்பம் , நோய் , மரணம் எல்லாம். இப்படி பாவம் பிராமணர்களை பற்றிக்கொள்கிறது. உண்மையான பிராமணர்கள் சுயநலமற்றவர்கள். தங்களிடம் உள்ளதை மற்ற பிராமணர்களுக்கு பகிர்ந்துகொடுத்துவிட்டு ஏழையாகவே வாழ்பவர்கள். எனவே அரசர்களிடமிருந்து பெறும் பாவம் அனைத்து எல்லா பிராமணர்களுக்கும் பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. சீடர்களுக்கு வேதம் கற்பித்தல் மூலம் அந்த பாவத்தை குறைக்கிறார்கள். மக்களின் நன்மைக்காக யாகம் செய்கிறார்கள். யாகம் என்பது தேவர்களுக்கு உணவு வழங்குவது. இதில் பிராமணர்கள் மீடியம்போல செயல்படுகிறார்கள். இப்போது தேவர்கள் யாகத்தின் மூலம் உணவு பெறுவதால் அந்த பாவம் ...